

சிவகாசி பட்டாசு தொழில்
Due to various reasons, firecracker production this year has dropped by 30 percent compared to normal levels, raising the risk of a 25 percent price increase.
பட்டாசு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சிவகாசி தான். பட்டாசு இல்லாமல் தீபாவளி களைகட்டாது. இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தீபாவளியை எதிர்நோக்கி பட்டாசு உற்பத்தி தொடங்குவது வழக்கம்.
கெடுபிடிகள், தயாரிப்பு மந்தம்
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியும் கடந்த ஆண்டு தீபாவளி முடிந்த சில நாட்களில் தொடங்கியது பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வின் காரணமாக, 200-க்கும் மேற்பட்ட ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மூலப் பொருட்கள் விலை உயர்வு
இதனால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்காசிய நாடுகளில் நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளைத் தொடர்ந்து விடுமுறை தினங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
25% தயாரிப்பு குறைவு
பல்வேறு காரணங்களால் நடப்பாண்டில் வழக்கத்தைவிட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், உற்பத்தியை தீவிரப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
பட்டாசு விலைகள் அதிகரிப்பால், இந்த ஆண்டு தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் இருக்குமா? அல்லது களையிழந்து போகுமா என்ற நிலை உருவாகி இருக்கிறது.
==================