TVK அரசின் முதல் ” பொதுபட்ஜெட் நாளை தாக்கல்” : பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம், 6ம் தேதி வேளாண் பட்ஜெட்...!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட், சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
irst budget of TVK govt, led by Chief Minister Vijay,presenஏ in the  Assembly tomorrow
irst budget of TVK govt, led by Chief Minister Vijay,presenஏ in the Assembly tomorrowAI generated
2 min read

தமிழகத்தில் தவெக அரசு

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவு ஆட்சியில் அமர்ந்தது.

பட்ஜெட் கூட்டம் - நாளை தொடக்கம்

முதல்வராக விஜய் பொறுப்பேற்க தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. பிறகு இரண்டு முறை சட்டமன்றம் கூடிய நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை நாளை கூடுகிறது.

தவெக அரசின் முதல் சட்​டப் ​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டு, பின்பு தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார்.

முதல்வர் தலைமையில் ஆலோசனை

இதையடுத்​து, நடப்பு 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்ய அரசு திட்​ட​மிட்​டது. அதற்​கேற்ப, பட்​ஜெட் முன்​த​யா​ரிப்​புப் பணி​கள் கடந்த 2 மாதங்​களாக நடை​பெற்​றன.

பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களின் முன்​னேற்​றம், பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள், தேர்​தல் வாக்​குறு​தி​களில் உடனே நிறை​வேற்ற வாய்ப்பு உள்ள அறி​விப்​பு​கள் ஆகியவை குறித்து முதல்​வர் விஜய் தலை​மை​யில் ஜூலை 2 முதல் 31-ம் தேதி வரை துறை வாரி​யாக ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

நிதி அமைச்சர் மரிய வில்சன்

இதையடுத்து, நடப்பு நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் மரிய வில்​சன் நாளை ( ஆகஸ்டு 5 ) சட்​டப்​பேரவை​யில் தாக்​கல் செய்​கி​றார்.

6ம் தேதி வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்​ஜெட்டை துறை அமைச்​சர் வினோத் நாளை மறு​நாள் ( ஆகஸ்டு 6 ) தாக்​கல் செய்ய உள்​ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால், பெண்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் அறி​விப்​பு​கள் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்​முதல் அதி​கரிப்​பு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்பு, போன்​ற அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் என்று கூறப்​படு​கிறது.

‘வெற்​றித் தமி​ழ​கம்’ - தொலைநோக்கு திட்டம்

இதுத​விர, ‘வெற்​றித் தமி​ழ​கம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்​தாண்டு தொலைநோக்கு திட்​டத்​தில் மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.7,000 கோடி வட்​டி​யில்லா கடனுத​வி, கல்​வியை மாநிலப் பட்​டியலுக்​குக் கொண்​டுவர நடவடிக்​கை...

மாணவர்களுக்கு 20 லட்சம் கல்விக்கடன்

மாண​வர்​கள் உயர் கல்விக்கு பிணை​யின்றி ரூ.20 லட்​சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்​நுட்​பப்​ பல்​கலைக்​கழ​கம்​ உள்​ளிட்​ட அம்​சங்​கள்​ இடம்​பெறக்​ கூடும்​ என்​றும்​ தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in