

மக்கள்தொகை கணக்கெடுப்பு
தமிழகத்தில் 2027ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு (House-listing and Housing Census) 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், 33 கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட உள்ளது.
முதன்முறைக 1872ல் மக்கள்தொகை
இந்தியாவை பொருத்தவரை முதன்முறையாக 1872ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும், 1881ல் தான் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
10 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு
அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை, முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
2 கட்டங்களாக கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் இரண்டு கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். முதல் கட்டத்தில் வீடுகளை கணக்கிடும் பணியும், இரண்டாவது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும்.
33 வகையான கேள்விகள்
அந்தவகையில் தற்போது வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 முதல் ஆகஸ்டு 30 வரை 45 நாட்களுக்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விவரங்கள் சேகரிப்பு
எந்த வகையான வீடு, வீட்டின் சுவர், கூரை மற்றும் தரையைக் கட்ட என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, வீட்டின் உரிமை நிலை என்ன, வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை...
குடிநீருக்கான ஆதாரம் என்ன, எல்பிஜி, தொலைக்காட்சி, மொபைல்போன், கணினி, இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளதா? உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன.
அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்விகளைக் கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
=====