

தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற, தமிழக வெற்றிக் கழகம், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
முதல்வர் விஜய், 9 அமைச்சர்கள் கடந்த 10ம் தேதி பதவியேற்றார்கள். நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார்.
வெளியில் இருந்து கம்யூனிஸ்டுகள் ஆதரவு
வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன, விசிகவும், ஐயுஎம்எல் கட்சிகளும் பரிசீலித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தன.
அமைச்சரவை விரிவாக்கம்
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த 2 பேர், தவெகவை சேர்ந்த 21 பேர் என 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்
இதற்கிடையில் தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுவதாக விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
வன்னி அரசுக்கு வாய்ப்பு
இது தொடர்பாக செய்தியளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்றும் அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேர்ப்பார் என்றும் கூறினார்.
ஷாஜகானுக்கு வாய்ப்பு
அதே போல ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இடம்பெறும் என்றும் பாபநாசம் தொகுதியின் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்” என்று அறிவித்தார்.
பதவியேற்பு விழா
இதையடுத்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் விஜய், அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.
அமைச்சரானார் ஷாஜகான்
ஷாஜகானுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 48 வயதாகும் ஷாஜகான், ஐயுஎம்எல் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.
அமைச்சரானார் வன்னி அரசு
அவரைத் தொடர்ந்து விசிகவை சேர்ந்த வன்னி அரசுக்கு, ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1999ம் ஆண்டு கட்சி தொடங்கியபொது, திருமாவளவன் முன்வைத்த முழக்கம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.
அந்த வார்த்தைக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு தான் விடை கிடைத்து, வரலாற்றில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்து இருக்கிறது.
தவெக அமைச்சரவை 35 பேர்
புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றதை அடுத்து, தமிழக அமைச்சரவையின் பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.
சிறுபான்மை நலத்துறை
அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
சமூக நீதித்துறை
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அமைச்சராகி இருக்கும் வன்னி அரசுக்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
=====