GST 2.0: வரி சீர்திருத்தம் புரட்சி, 375 பொருட்கள் விலை குறைகிறது

Nirmala Sitharaman on Next Gen GST 2.0 Reforms : ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரிகுறைப்பு மட்டுமல்ல, அது ஒரு புரட்சி என, மத்திய நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
Nirmala Sitharaman on Next Gen GST 2.0 Reforms in Tamil
Nirmala Sitharaman on Next Gen GST 2.0 Reforms in Tamil
1 min read

தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா :

Nirmala Sitharaman on Next Gen GST 2.0 Reforms : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா(Matchbox Industry Centenary) நடைபெற்றது. இது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தீப்பெட்டித் தொழிலில் பெண்களின் பங்களிப்பையும், மத்திய அரசின் திட்டங்களையும், எதிர்கால இலக்குகளையும் பற்றி எடுத்துரைத்தார். தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சிக்கு பெண்களே அச்சாணி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

377 பொருட்கள் விலை குறைப்பு :

மத்திய அரசின் கடமையே தென் மாவட்டங்களுக்கு உதவுவது தான். 2047ம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஜிஎஸ்டி சீர்திருத்தம்(Next Gen GST Reforms) மூலம் 375 பொருட்களுக்கு விலை குறைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அல்ல, அது ஒரு புரட்சி. தீப்பெட்டி தொழிலாளர்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

உங்களுக்கான ஒருவரை தேர்ந்து எடுங்கள் :

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்சினைகள், பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை நன்கு தெரிந்த ஒருவரையே சட்டசபை உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்திய அரசு அண்மையில் 375 பொருட்களுக்கு 10% வரை ஜிஎஸ்டி வரியைக்(GST Tax Rate) குறைத்துள்ளது.

மேலும் படிக்க : GST 2.0 : பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி, மக்களிடம் பணப் புழக்கம்

பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு :

இந்தக் குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு(Next Gen GST Reforms Effective Date) வரும். இது பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் தீபாவளிப் பரிசு. இந்த வரி குறைப்பு, மக்கள் பொருட்களை வாங்கும்போது பணத்தைச் சேமிக்க உதவும். நாட்டின் பொருளாதார நிலை மேலும் வலுவடைந்தால் ஜிஎஸ்டி வரி அடுக்கு ஒன்றாக குறைக்கப்படும்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in