
RB Udhayakumarசுழன்றி அடிக்கும் கூட்டணி :
RB Udhayakumar About ADMK Kootani : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருப்பதால், யார் யாருடன் கூட்டணி என்பதில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. திமுக கூட்டணி அப்படியே இருக்க, அதிமுக கூட்டணிக்கு யார் எல்லாம் வருவார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா? அல்லது பாஜகவை கைவிட்டு, தவெகவை கூட்டணிக்கு அழைக்குமா? சீமான் என்ன செய்யப் போகிறார்? போன்ற கேள்விகள் அப்படியே நிற்கின்றன.
விஜய், சீமான் வியூகம் என்ன? :
தவெக தலைமையில் தான் கூட்டணி, நானே முதல்வர் வேட்பாளர் என ஒற்றைக் காலில் நிற்கிறார் விஜய்(TVK Vijay). இது தேர்தல் வரை தொடருமா? அல்லது கூடுதல் சீட்கள், ஆட்சியில் பங்கோடு முடிவுக்கு வருமா என்பது போகப் போகத் தெரியும். தொடக்கத்தில் இருந்தே தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் சீமான்(NTK Seeman), இந்த முறையும் தனித்துதான் என்று பேசி வருகிறார். அப்படி நடந்தால், வெற்றி சாத்தியமா? ஒரு தொகுதி கூட ஜெயிக்காமல் தொடர்ந்து கட்சியை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.
கூட்டணியை வலுவாக்கும் அதிமுக :
திமுகவை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும் கூட்டணி வரலாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. எனவே, விஜய், சீமான் வந்தால் வரவேற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்(RB Udhayakumar Speech), " எடப்பாடி பழனிசாமி நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அதை நிராகரித்து இருப்பதை பற்றி கேள்வி கேட்கிறீர்கள். முக்கிய கட்சியான அதிமுக திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமக, அன்புமணி, ராமதாஸ் திமுகவை எதிர்க்கிறார்கள்.
ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் :
திமுகவை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அந்த நோக்கம் நிறைவேறும். திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட், திருமாவளவன் ஆட்சிக்கு மாறான கருத்துக்களை சொல்லுகின்றனர். 20 சதவீதம் ஆதரவு, 80 சதவீதம் எதிர்ப்பு நிலையில் உள்ளனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகளில் 50 ஆண்டு கால வரலாறு, கொள்கை கொண்ட மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
திமுக எதிர்ப்பு தோல்வி அடையக்கூடாது :
80 சதவீத திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால் சிதைந்து விடக் கூடாது. எனவே அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற மக்கள் விரும்பும் நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் நோக்கம் நிறைவேறும். எதிர்க்கும் கட்சியில் நம்பிக்கை பெற்ற தலைவர் எடப்பாடி. பிரிந்து நின்றால் திமுகவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறாது.
ஆடி போய் ஆவணி வந்தால்? :
அன்வர் ராஜா திமுகவில் சேர்ந்ததால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏதும் இல்லை. எல்லாம் நல்லதாக நடக்கும். ஆடி மாதம் போய் ஆவணி(Aavani Month) வந்தால், எல்லாம் கைகூடும். எல்லாம் சரியாகும் போது, அடுத்தடுத்து நல்லதே நடக்கும்” இவ்வாறு ஆர். பி. உதயகுமார்(RB Udhayakumar Speech) தெரிவித்தார்.
=====