திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தயாரா? : காங்கிரசுக்கு சவால்

Annamalai on Trichy Siva Kamarajar Remarks : குறைந்தபட்ச மானத்தை காக்க திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
TN Former BJP Leader Annamalai on Trichy Siva Kamarajar Remarks
TN Former BJP Leader Annamalai on Trichy Siva Kamarajar Remarks
1 min read

நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர் :

Annamalai on Trichy Siva Kamarajar Remarks : காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திமுக எம்பி திருச்சி சிவா, பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக, பாமக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், திமுக எம்பியும், பொருளாளருமான டி.ஆர் பாலு தொடர்ந்து வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரானார். வழக்கு தொடர்ந்த டி.ஆர். பாலு நீதிமன்றத்திற்கு வரவில்லை.

காமராஜரை வீழ்த்திய திமுக :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை(Annamalai Press Meet), ” காமராஜரை பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை. அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு திமுகவே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள்.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்ட போதும், காங்கிரஸ் தமிழகத்திலும் வரக் கூடாது, இந்தியாவிலும் வரக் கூடாது என்பதற்காக திமுகவினர் செயல்பட்டார்கள் என்பதற்கு 1971ம் ஆண்டு தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.1967ம் ஆண்டு தேர்தலின் போது கருணாநிதி பேசியது, எல்லாவற்றையும் எடுத்து போட்டு காட்டினால், மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட திமுக கூட்டணியில்(DMK Congress Alliance) இருக்க மாட்டார்கள்.

கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் தயாரா? :

கடைசி காலம் வரை சொத்துக்களை சேர்க்காதவர், எளிமையானவர். வரலாற்றை மாற்றி திரித்து பேசுவதை கண்டிக்கிறேன். மானம் இருக்கும் காங்கிரஸ் கட்சி பார்த்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா? இன்னொரு கூட்டணிக்கு போங்க என்று நான் சொல்லவில்லை.

மேலும் படிக்க : காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு : திருச்சி சிவாவுக்கு கண்டனம்

திமுக கூட்டணியில் இருந்து வருவதற்கு தயாரா? என்று மட்டுமே கேட்கிறார். ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஓரிரு நாட்கள் பேசிவிட்டு அமைதியாகி விடுவார்கள்.” இவ்வாறு அண்ணாமலை சாடினார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in