” புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அன்பில் மகேஷ்” : அடுத்து யார்?, சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!

பள்ளிக்கல்வித்துறை நடைபெற்ற ஊழல் தொடர்பாக, கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Former DMK minister Anbil Mahesh,  arrested in connection with corruption, lodged in Puzhal Prison
Former DMK minister Anbil Mahesh, arrested in connection with corruption, lodged in Puzhal Prison
3 min read

திமுகவின் ஊழல் - தவெக குற்றச்சாட்டு

திமுக தீய சக்தி, ஊழலில் ஊறிய கட்சி, திமுக ஆட்சியில ஊழல் தலைவிரிச்சு ஆடியது, அமைச்சர்களா இருந்தவங்க கோடிகளை சுருட்டி இருக்காங்க அப்படின்னு, தனது பிரசாரத்தில ஆணித்தரமான குற்றம்சாட்டி பேசிய தவெக தலைவர் விஜய், முதல்வராகி ஆட்சி பொறுப்பேற்றதும், ஊழல் நடந்ததா சொல்லப்படுகிற துறைகளில ஜல்லடைபோட்டு அலசி இருக்காரு.

முதல்வர் மேஜையில் மூன்று பைல்கள்

அந்த வகையில மூன்று பைல்கள் தனது டேபிள்ள ரெடியா இருக்கிறதா, சட்டமன்றத்துலேயே அவர் சுட்டிக் காட்டினாரு. திமுக ஆட்சியில, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரா இருந்தவருதான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிக்கல்வித்துறை - ரூ.100 கோடி ஊழல்

திமுக ஆட்சியில பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக 100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பணம் கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகி டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினாங்க. விசாரணையின் ஒரு பகுதியாக, அன்பில் மகேஷுடன் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இடங்களில் போலீசார் சோதனை நடத்தினாங்க.

அப்போது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா தெரிவிக்கப்பட்டது.

பி.டி.அரசகுமார் கைது

இதனிடையே, புகாரின் அடிப்​படை​யில் தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் சங்​கக் கூட்​டமைப்​பின் முன்​னாள் தலை​வரும், திமுக பிர​முகரு​மான பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டாரு. அவர் 177 தனியார் பள்​ளி​களிடம் இருந்து 400 கோடிக்​கும் அதி​க​மாக பணம் பெற்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துச்சு.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அரசகுமார் மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்​குச் சொந்​த​மான 20 வங்​கிக் கணக்​கு​களும், அன்​பில் மகேசின் நெருங்​கிய நண்​பரும், சங்​கத்​தின் மாநில பொருளாள​ரும், முன்​னாள் எம்​எல்ஏ-வுமான முத்​துகுமார் தொடர்​புடைய 29 வங்​கிக் கணக்​கு​களிலும் பணப் பரிமாற்றம் நடந்தது கண்​டறியப்​பட்​டுச்சு.

ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​கு

இதன் தொடர்ச்​சி​யாக, அன்​பில் மகேஷ் மீதும் ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவரிடம் போலீசார் சுமார் 8 மணி நேரம் விசா​ரணையும் நடத்தினாங்க.

அன்பில் மகேஷ் முன் ஜாமின் தள்ளுபடி

இந்தச்சூழலில் தான் கைது செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதா யூகித்த அன்பில் மகேஷ், முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தாரு.

இந்த மனுவை நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் விசாரிச்சாரு. அன்பில் மகேஷூக்கு முன்ஜாமின் தரக்கூடாது என்று அரசு தரப்பு தனது வாதங்களை முன்னெடுத்து வச்சது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தாரு. 400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்து இருக்கிறதா அரசு தரப்பு சொல்லுது.

அரசி​யல் செல்​வாக்கு மிக்க நபர்​கள் தொடர்​புடைய வழக்​கு​களில் விசா​ரணை​யின் ஆரம்ப கட்​டத்​திலேயே முன்​ஜாமீன் வழங்​கினால் அது புலன் விசா​ரணை​யைப் பாதிக்​கும்.

தலைமறைவாகவுள்ள முத்​துக்​குமாரை பிடிக்க வேண்​டிய கட்​டாயத்​தில், அவருடன் தொடர்​புடைய அன்​பில் மகேஷூக்கும் முன்​ஜாமீன் வழங்​கு​வது ஏற்​புடைய​தாக இருக்​காது, அப்படின்னு நீதிபதி தனது தீர்ப்பில தெளிவா குறிப்பிட்டாரு.

அன்பில் மகேஷ் கைது

முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில, சென்னை அமைந்தகரையில் உள்ள வழக்​கறிஞர் வில்​சனின் அலு​வல​கத்​தில் இருந்த அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செஞ்சாங்க.

வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பி​ரிவு அலு​வல​கத்​தில் அழைத்து சென்று விசாரணை நடத்தினாங்க.

நீதிபதி முன்பு காரசார வாதம்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனையில் அன்பில் மகேஷூக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில், நீதிபதி எல்.எஸ்.சத்​யமூர்த்தி முன்​னிலை​யில் அவர் ஆஜர்படுத்தப்பட்டாரு.

திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் அராஜகமாக காவல்துறை எனது அலுவலகத்துக்குள் நுழைந்து அன்பில் மகேஸை கைது செய்தாக குறிப்பிட்டாரு.

ஏற்கனவே அவர்கிட்ட போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்காங்க. நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சம்மன் கூட அனுப்பாமல் கைது செஞ்சு இருக்காங்க. அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது. தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தான் வழக்கிற்கே காரணம் அப்படின்னு வாதிட்டாரு.

போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், “போலீசார் ஒரு மணி நேரம் அலுவலகத்துக்கு வெளியில் காத்திருந்தனர். வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோதுதான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் சம்பவத்துக்கு பிறகு நிரந்தர அங்கீகாரம் எந்த பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதில்லை. அரசின் கொள்கை முடிவை உடைக்கும் நோக்கில் தான் கோடிக்கணக்கில் லஞ்சத்தை கட்சி நிதி எனக்கூறி வசூலித்துள்ளனர்’’ அப்படின்னுத தெரிவிச்சாரு.

நவம்பர் 9 வரை காவல், சிறையில் அடைப்பு

நள்ளிரவு வரை வாதம் நீடித்த நிலையில் நீதிபதி சத்யமூர்த்தி தனது தீர்ப்பில, நவம்பர் 6-ம் தேதி வரை அன்பில் மகேஸை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு போட்டாரு.

மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் சிறை நிர்வாகத்தினரை அணுகலாம். சிறையில் முதல் வகுப்பு, நல்ல உணவு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன்.

அடுத்த கைது யார்? எகிறும் எதிர்பார்ப்பு

முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம்’’ அப்படின்னு சொன்னாரு.

முதல்வர் விஜய்யோட மேஜையில மூன்று ஊழல் பைல்கள் தயாரா இருக்கிறதா சொல்லப்படுற நிலையில, முதல் பைல் மூவ் ஆகி இருக்கிறதா பேசிக்கிறாங்க தவெகவினர். அடுத்த யார் என்ற கேள்வியும் எழுந்து இருக்கு.

ஏன்னா, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான 634 கோடி ரூபாய் ஊழல் வழக்கில, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கலாம் அப்படின்னு, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று காலையில தான் கிரீன் சிக்னல் கொடுத்துச்சு.

எனவே, அடுத்து கே.என். நேரு கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுது. 2021ல திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வாசிக்கப்பட்டுச்சு. கவர்னரை சந்திச்சு பட்டியல் கொடுத்த திமுக, நடவடிக்கை எடுக்கணும் அப்படின்னும் சொல்லுச்சு,

இதுல சில வழக்குகள் மட்டுமே 5 ஆண்டுகளை கடந்தும் நீதிமன்றங்களில் இருக்கு. எனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அப்படித்தான் பெயரளவில் நின்று போகுமா? அல்லது தவெக அரசு சாட்டையை சுழற்றி, சம்மட்டி அடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து இருக்கு.

ஊழலை முழுமையாக ஒழிப்பேன். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வர லஞ்சமே வாங்க மாட்டோம் என்பது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை முழக்கம். அடுத்தடுத்த என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in