முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் குறித்து அவதூறாகவுகம் , ஒருமையில் முதல்வரை சாடியதற்காகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கானது தவெக நிர்வாகி சார்பில் தொடுக்கப்பட்டது
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ,மனு தள்ளுபடி
அனிதா ராதாகிருஷ்ணன் அளித்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மனு தள்ளுபடி குறித்து நீதிபதிகள் கூறியதாவது
திமுக முன்னாள் அமைச்சரும் , திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம் ,எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு அளிக்கப்ப்ட்டிருந்த நிலையில் , அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு எம்எல்ஏ ஏன் இதுபோன்ற மொழியில் பேச வேண்டும்” என வினவி இந்த முன ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
மனு தள்ளுபடி ,கைது செய்யபட்ட அமைச்சர்
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் , ஆத்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறை கைது செய்துள்ளது , அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
வழக்கின் பிண்ணனி
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
அதில் உரையாற்றிய திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
காவல் துறை வழக்கு பதிவு,
இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்
அவதூறு வழக்கு முன் ஜாமின் கோரிய அமைச்சர்
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது
காவல்துறை தரப்பு வாதம்
இந்த வழக்கில் காவல் துறை தரப்பில், ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முன் ஜாமீன் தள்ளுபடி
தொடர்ந்து விசாரித்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரான ஒருவர் இப்படி ஒருமையுடனும், அவதூறுகளை பரப்புவதாகவும் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து இருக்கிறார்கள். ========================