வெளியான வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார், அதில் அவர் கூறியிருந்ததாவது
வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் , தமிழ்நாடு அரசு அதிகமான வட்டி கட்டுகிறது என்ற குற்றச்சாட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார் ,அதாவது குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு அரசு அதிக வட்டி கட்டுவதாக கூறியிருந்தார்
தங்கம் தென்னரசு விளக்கம்
இது குறித்து கூறிய அவர் குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, காலை உணவுத் திட்டம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியங்கள், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற நலத்திட்டங்கள் குஜராத்தில் செய்யவில்லை. இதன் காரணமாகதான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையில் செலவு செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு
தவெகவின் தேர்தல் வாக்குறுதி
தேர்தல் வாக்குறுதியில் இலவச சிலிண்டர்கள், இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை, கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 என பல வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள்.
இதையெல்லாம் மூலதனச் செலவீனத்தில் இருந்து செலவு செய்வோம் என்று கூறுனீர்களா? சிங்கப் பெண் அதிரடிப் படை மூலதனச் செலவீனத்தில் இருந்துதான் தொடங்குனீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
5 ஆண்டுகள் மட்டும் கணக்கீடப்பட்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கை வெளியீடு என்பது முதல்முறை இல்லை. இதற்கு முன்னதாக இரண்டு முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்.
5 ஆண்டு கணக்கீன் படியே தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
2001 வெள்ளை அறிக்கையானது 10 ஆண்டுகள் கணக்கெடுக்கப்பட்டது. 2011 வெள்ளை அறிக்கையானது 15 ஆண்டுகள் கணக்கிட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தவெக வெறும் 5 ஆண்டுகள் ஆட்சியை மட்டுமே கணக்கிட்டுள்ளனர் அது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்
வாக்குறுதிகளை நிறைவேற்றி, குறைவாக கடன் வாங்கினால் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்
அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி, நாங்கள் வாங்கிய சராசரி கடனைவிட, குறைத்து கடன் வாங்கினோம் என்று நிரூபித்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வியெழுப்பியுள்ளார்
குஜராத்தை ஒப்பிட்டுள்ளார்கள். அந்த மாநிலத்தில் காலை உணவுத் திட்டம், மகளிர் இலவசப் பேருந்து, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்களை அவர்கள் செய்யவில்லை. என்று வெள்ளை அறிக்கை தொடர்பாக தெரிவித்துள்ளார்
=========================