தவெக அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்ற அமைச்சர்கள்
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே.
ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.கமலி - நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.கமலி, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்களில் இவரும் ஒருவர். இவருக்கு வயது 28. இவருக்கு கால்நடை வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ராஜ்குமார் - கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ராஜ்குமாருக்கு வயது 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார்.
இவருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.மதன்ராஜா - தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ராஜேஷ் குமார் - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார். இவர் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பெ.விசுவநாதன்[ காங்கிரஸ் ]- மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விசுவநாதன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக அறிவித்த வேட்பாளர் இவர்தான்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே பட்டியலின வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2009 - 2014 காலக்கட்டத்தில் இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.குமார் - சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார் ஒரு தொழிலதிபர். அவர் பொறியியல் பயின்றுள்ளார். அண்மையில் ஐஐஎம் பெங்களூருவில் பிசினஸ் லீடர்ஷிப் பயின்றுள்ளார். இவருக்கு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வி.சம்பத்குமார் - கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வி.சம்பத்குமார், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை வீழ்த்தி கவனம் பெற்றார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக எம்பிஏ முடித்துள்ளார். சுயதொழில் புரிந்துவருகிறார். இவருக்கு இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முக்கியத்துவம்
இந்த அமைச்சரவை வெறும் ஆட்சிப் பொறுப்பிற்கானது மட்டுமல்லாமல், சமூக நீதி மற்றும் பிராந்திய சமநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது பட்டியலின பிரதிநிதித்துவம். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒட்டுமொத்தமாக 7 பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இதில் தவெக சார்பில் 6 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் இடம் பெற்றுள்ளன.
==================