
சி.பி. ராதிகிருஷ்ணன் ‘Bio Data’ :
Vice President Candidate C.P. Radhakrishnan : சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் மீது கொண்ட ஈடுபட்டால், ஜன சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். இவர் பிபிஏ படிப்பை முடித்தவர். பின்னர் பாஜகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சி.பி. ராதிகிருஷ்ணன், 1996ம் ஆண்டு தமிழக பாஜக செயலரானார்.
எம்பியாக சி.பி. ராதிகிருஷ்ணன் :
1998 மற்றும் 1999 ம் ஆண்டுகளில் கோவையில் இருந்து மக்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆயினும் 2004, 2014, 2019ம் ஆண்டுகளிலும் எம்பி தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
தமிழக பாஜக தலைவர் :
2003 முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பு வைகத்தார். நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுதும், 93 நாளில் 19,000 கிமீ. துாரம் ரத யாத்திரை நடத்தினார். 2004ம் ஆண்டு இந்தியா சார்பில், ஐநா. சபைக்கு சென்ற எம்பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கு உரையாற்றினார்.
கயிறு வாரியத் தலைவர் :
2016ம் ஆண்டு பாஜக ஆட்சியில் தேசிய கயிறு வாரியத் தலைவர் பதவி அவர் வகித்தார்.
ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் :
2023ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக அவர் பொறுப்பேற்றார். தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 2014 மார்ச் 19ம் தேதி முதல் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார்.
துணை ஜனாதிபதியாகும் சி.பி. ராதாகிருஷ்ணன் :
அதே ஆண்டு ஜூலை 27ம் தேதி மகாராஷ்டிர ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இன்றுவரை அந்தப் பொறுப்பில் இருக்கும் அவர், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
3வது தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் (1952 --- 1962), ஆர்.வெங்கட்ராமனுக்கு (1984 -- 1987) பிறகு, தமிழகத்தில் இருந்து துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் மூன்றாவது தமிழர், சி.பி.ராதாகிருஷ்ணன் ,என்பது குறிப்பிடத்தக்கது.
=============