மூப்பனார் பிரதமராவதை தடுத்து தமிழகத்திற்கு துரோகம் : நிர்மலா சாடல்

Nirmala Sitharaman on GK Moopanar : மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தவர்கள், தமிழகத்திற்கு துரோகம் இழைத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
Finance Minister Nirmala Sitharaman on GK Moopanar
Finance Minister Nirmala Sitharaman on GK Moopanar
1 min read

மூப்பனார் நினைவு தினம் :

Nirmala Sitharaman on GK Moopanar : தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தேசியத் தலைவர் ஜி.கே. மூப்பனார் :

நிகழ்ச்சியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ”எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவர் மூப்பனார். அவருக்கு நாடு அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியது.

மூப்பனார் பிரதமராவதை தடுத்தனர் :

பிரதமராக வேண்டிய நிலையில் ஆதரவு தராமல் அதனை தடுத்தனர். அந்த சக்தி யார் என்று நமக்கு தெரியும். தமிழ், தமிழ் கலாசாரம் என்று திரும்ப திரும்ப பேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்த சமயம் ஆதரவு தராமல் வேண்டுமென்றே தடுத்தனர். இதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு நடந்த துரோகம் :

இதனை மறக்கவும் முடியாது. ஆளுமை மிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை(GK Moopanar as PM) தடுத்ததை, தமிழத்திற்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன். தமிழகத்தில் அந்த மாதிரி, அவரது கொள்கைக்கு ஏற்ற மாதிரி, நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது.

2026ல் மாற்றம் அவசியம் :

2026ம் ஆண்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனை பூர்த்தி செய்ய கூடிய சக்தி நாம் எல்லோரிடமும் இருக்கிறது. தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்.

போதைப்பொருள் வேண்டாம். சாராயம் தண்ணீரை விட கேடு கெட்ட நிலையில் பரவுகிறது. மக்கள் எல்லோருக்கும் தொண்டு செய்வது நமது கடமை.

மேலும் படிக்க ; Election 2026: எடப்பாடி தான் தமிழக முதல்வர் : அண்ணாமலை திட்டவட்டம்

சின்ன பூசல்களை பெரிதுபடுத்த வேண்டாம் :

இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும். இந்த கூட்டணியின் மூலம் மக்களுக்கு நாம் தொண்டு ஆற்ற வேண்டும். சின்ன சின்ன உட்பூசல் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முதிர்ச்சி அடைந்த, பக்குவமான தலைவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நல்லாட்சி அமைய உழைக்க வேண்டும். இதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலி” இவ்வாறு நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman Speech) உரையாற்றினார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in