கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணம் : ”12-துறை அதிகாரிகளே பொறுப்பு, விசாரணை நடத்துக” : கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை..!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 67 பேர் உயிரிழக்க காரணமாக கள்ளச்சாராய விவகாரத்தில், 12 துறை அதிகாரிகளே பொறுப்பு, என்று கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Gokuldas Commission report holds 12 departmental officials responsible for illicit liquor incident in Kallakurichi
Gokuldas Commission report holds 12 departmental officials responsible for illicit liquor incident in Kallakurichi google
1 min read

Gokuldas Commission report holds 12 departmental officials responsible for the illicit liquor incident in Kallakurichi district that claimed 67 lives

கள்ளச்சாராயம் - 67 பேர் மரணம்

திமுக ஆட்சியில் 2024ம் ஆண்டு ஜூன் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது திமுக அரசு.

ஆணைய அறிக்கை தாக்கல்

இந்த ஆணையத்தின் இறுதி அறிக்கை, சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது.

அதிகாரிகளே பொறுப்பு - ஆணையம் குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 துறை அதிகாரிகளே பொறுப்பு எனக் கூறியுள்ள விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்குமே கள்ளச்சாராய மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மெத்தனம்

கள்ளச்சாராயம் குறித்து தொடக்கத்திலேயே தெரிந்தும் காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளே முழு பொறுப்பு

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராபாளையம் காவல் நிலையங்களில் பணிபுரிந்த காவல் துறையினர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோரே இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இச்சம்பவம் தொடர்பாக 2023 மே முதல் 2024 ஜூன் வரை பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் மற்றும் அவர்கள் கல்வி முடித்தவுடன் அரசு வேலை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

வருங்காலங்களில் இதுபோன்று நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோகுல்தாஸ் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in