மீண்டும் மீண்டுமா! : இன்றும் ஏறுமுகம் காட்டிய தங்கம்,வெள்ளி

Gold Rate : புத்தாண்டு தொடங்கிய நாளிலிருந்தே தங்கத்தின் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,அந்த வகையில் இன்று காலை மீண்டும் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
Gold and Silver Rate Increased Today in Chennai check current gold and silver price update in Tamil
Gold and Silver Rate Increased Today in Chennai check current gold and silver price update in TamilSource : Google
1 min read

விலைக்கான நிர்ணயம்

Gold and Silver Rate Today in Chennai : நேற்று (பிப்.3) வர்த்தக முடிவின்போது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை, இன்று (பிப்.4) காலையிலேயே பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு

கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலை அளித்திருந்த நிலையில் இன்று மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது . மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்திருந்தது .

சென்னையில் தங்கத்தின் விலை

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்தது .விலை குறைப்பு நீடிக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்தது.

இன்றைய நிலவரப்படி

இந்நிலையில், இன்று (பிப்.4) காலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை நேற்று மதியம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது, சாமான்ய மக்களை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in