தொடர் ஏற்றத்தில் ஆபரணத்தின் விலை
கடந்த சில மாதங்களாகவே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்றத்தை சந்தித்து வருகிறது . தொடர்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்க போர் சூழல் காரணமாக ,
மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது உலகளவில் வணிக ரீதியாகவும் , எரிப்பொருள் தட்டுப்பாடனது நிலவி வருகிறது , இந்த நிலையில் ஆபரண தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்துக்கொண்டு இருக்கிறது
இன்றை நிலவரப்படி தங்கத்தின் விலை
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையானது ,சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும்,
கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி
சர்வதேச நிலவரங்களால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது ,நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை கிராமுக்கு, 400 ரூபாய் குறைந்து, 13,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,200 ரூபாய் சரிவடைந்து, 1,10,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரமானது
இந்நிலையில் இன்று விலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 5,600 ரூபாய் சரிந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
======================