தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு : வெள்ளி கிராம் ரூ.170

Today Gold Rate in Chennai : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து 93,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Gold prices increased by Rs.1,760 per sovereign in today, sold at Rs. 93,600
Gold prices increased by Rs.1,760 per sovereign in today, sold at Rs. 93,600
1 min read

ஏற்ற இறக்கத்தில் தங்கம்

Today Gold Rate in Chennai : சர்வதேச நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தை வாங்கிக் குவிக்கும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போன்ற காரணங்கள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,300 ரூபாய்க்கும், சவரன், 90,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்வு

நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 11,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 91,280 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 11,480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் உயர்ந்து, 91,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,440 ரூபாய் அதிகரித்தது.

சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,764 ஆக உள்ளது. 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,750 ஆக உள்ளது.

வெள்ளி விலையும் அதிகரிப்பு

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,76,000 ரூபாய்க்கு(Silver Rate Today in Chennai) வி்ற்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்தது. தஙகத்தின் விலை நிலவரத்திற்கு ஏற்ப வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in