
தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு :
Gold Rate Increased Today in Chennai : சர்வதேச சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்ட வரலாறு படைத்து வருகிறது. சாமான்ய மக்களுக்கு எட்டாக் கனியாக தங்கம் மாறி விட்டது என்பதே உண்மை. அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் சளைக்காமல் அதிகரித்து வருகிறது.
நேற்று சவரனுக்கு ரூ.1,120 உயர்வு :
தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரு கிராம் ரூ.10,430க்கும், சவரன் ரூ.83,440க்கும் விற்பனையானது.
ரூ.84,000 கடந்த தங்கம்
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500க்கு விற்பனையானது. . சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.149-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரன் ரூ.85,000 புதிய உச்சம் :
இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு :
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இந்த அளவு அதிகரித்தது இதுவே முதன்முறை. ஒரு கிலோ வெள்ளி விலை ஒன்றரை லட்சம் ரூபாயை எட்டி இருக்கிறது.
மேலும் படிக்க : GOLD: ரூ.84,000-ஐ தாண்டியது தங்கம் : வரலாறு காணாத உச்சம் தொட்டது
நகை வாங்குவோர் அதிர்ச்சி :
பண்டிகை நாட்கள் தொடங்கி விட்ட நிலையில், முகூர்த்த நாட்களும் வரிசை கட்டி வருவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது. பொதுவாக பண்டிகை, சுபமுகூர்த்த காலங்களில் தங்கம் விலை சற்று உயர்வதுண்டு. ஆனால், இந்த ஆண்டு பலமுறை உச்சத்தை தொட்டு விட்ட தங்கம், நவராத்திரி தொடங்கிய நாளிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
===============