சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் : ஏப்ரல் 5 முதல் சீராகிறது ரயில் சேவை!

egmore railway station renovation work: ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என்பதால் ரயில் பயணிகள் பெரும் நிம்மதியடைந்து உள்ளனர்.
Suburban Train Services to Normalize from April 5!
Suburban Train Services to Normalize from April 5!source : google
1 min read

Egmore Redevelopment Work Nears Completion: Suburban Train Services to Normalize from April 5!

நிறைவுபெறும் தருவாயில் எழும்பூர் மறுசீரமைப்பு பணி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெரும் தறுவாயில் இருப்பதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 5 ஆம் தேதிமுதல் புறநகர் ரயில்சேவை சீராகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய மறுசீரமைப்பு பணிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி எழுப்பூர் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

அதுநாள் முதல் ரூ.735 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 44 ரயில்கள் ரத்தை தொடர்ந்து கூடுதலாக 20 ரயிகள் ரத்து செய்யப்பட்டன.

நடைமேடைகள் மாற்றம்

மேலும் புறநகர் ரயிக்ல் சேவைக்கான 10 மற்றும் 11 ஆம் நடைமேடைகள் மூடப்பட்டு அதற்கு பதிலாக 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகள் புறநகர் ரயில் நடைமேடையாக தற்காலிகமாக மாற்றப்பட்டது.

ரயில் பயணிகள் மேற்கொண்ட சிரமங்கள்

எழும்பூரி பராமரிப்பு பணிகள் காரணமாக சிக்னல் கோளாறு, ஒரே டிராக்கில் ரயில்கள் நிற்பது, எழும்பூரைக் கடக்கவே 30 நிமிடம் முதல் 1 மணி நேர காலம், ரயில்கள் பற்றாக்குறை, ரயில்கள் தாமதமாக இயக்கம் என ரயில் பயணிகள் ஏராளமான சிரமங்களை சந்துத்து வருகின்றனர்.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

இந்நிலையில் ரயில் பயணிகளின் சிரமங்களை போக்கி, நிம்மதியளிக்கும் வகையில் ஏப்ரல் 5ஆம் தேதிமுதல் வழக்கம் போல 10 மற்றும் 11 ஆம் நடைமேடைகளில் இருந்து புறநகர் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேம்பால நிழற்குடைகள், சாய்வு பாலம் அமைக்கும் பணி

மேலும், மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் என்றும் சாய்வு பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் நிம்மதி

ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என்பதால் ரயில் பயணிகள் பெரும் நிம்மதியடைந்து உள்ளனர்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in