சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 17 வரை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்...

சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் ...
Good News for Tamil Nadu Residents: Rain Likely to Continue Until August 17 says chennai metrological board
Good News for Tamil Nadu Residents: Rain Likely to Continue Until August 17 says chennai metrological boardAI Generated
1 min read

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17 வரை மழை தொடரும் :

சென்னை உள்பட பல இடங்களிலும் ,மேற்குத்தொடர்ச்சி பகுதிகளான கோவை நீலகிரி தேனி மற்றும் திண்டுக்கல் ,கரூர் போன்ற மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 17 வரை மழை பொழிய வாய்ப்பு என தகவல் அதேபோல புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு :

அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான பல்வேறு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அதையே போல சில நேரங்களில் சென்னையில் குளுமையான சூழல் நிலவும் எனவும் தகவல்

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு பயன் :

இந்த மழை, விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பெரிதும் உதவக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் நிரம்புவதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த மழை சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக பல பகுதிகளில் சாகுபடி பணிகள் வேகமடையும் சூழலும் உருவாகியுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுரை

மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளி பகுதிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in