அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2026 : இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.27 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. மே 29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Government Arts and Science Colleges Admissions 2026: Online Applications Begin Today!
Government Arts and Science Colleges Admissions 2026: Online Applications Begin Today!source: google
1 min read

Government Arts and Science Colleges Admissions 2026: Online Applications Begin Today!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கான இளங்கலைப் படிப்பு (UG) முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகளைக் கல்லூரிக் கல்வி ஆணையர் இ. சுந்தரவல்லி நேற்று (மே 6) வெளியிட்டார்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலக்கெடு

பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், தமிழக அரசின் www.tngasa.in என்ற பிரத்யேக இணையதளத்தைப் பயன்படுத்தி இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்.

மே 29 வரை விண்ணப்பப் பதிவு

இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் மே 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'சேர்க்கை உதவி மையங்கள்'

இணையதள வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் 'சேர்க்கை உதவி மையங்கள்' பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான கட்டண விவரங்கள்

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் குறித்த விவரங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மொத்தக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். இதில் விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

SC/ST பதிவு கட்டணம் ரூ.2

எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; அவர்கள் வெறும் ரூ. 2 பதிவுக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.

கட்டணம் செலுத்தும் வசதி

இந்தக் கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI) போன்ற மின்னணு முறைகளில் எளிதாகச் செலுத்தலாம்.

கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள்

தமிழகம் முழுவதும் மொத்தம் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 159 பாடப்பிரிவுகளில் சுமார் 1.27 லட்சம் இடங்கள் உள்ளன.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளையும், தாங்கள் பயில விரும்பும் பாடப்பிரிவுகளையும் இந்த ஒற்றைச் சாளர முறை ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலமே தேர்வு செய்துகொள்ள முடியும்.

சரியான நேரத்தில் விண்ணப்பித்து, தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளில் இடத்தைப் பிடிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in