24 மணி நேர பணியை ரத்து செய்து ஷிப்ட் முறையை கொண்டுவர மருத்துவர்கள் வலியுறுத்தல்: எம்.எல்.ஏ- வின் நள்ளிரவு ஆய்வு எதிரொலி!

எம்.எல்.ஏ சரவணனின் இந்த நடத்தைக்கு அரசு மருத்துவர்கள் அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Government Doctors Protest MLA Srivaikuntam Saravanan Action Eral Hospital
Government Doctors Protest MLA Srivaikuntam Saravanan Action Eral Hospitalsource:google,ai generated
1 min read

Government Doctors Protest MLA Srivaikuntam Saravanan Action Eral Hospital

ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு ஆய்வு செய்த எம்.எல்.ஏ சரவணனுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து ஷிப்ட் முறை கோரிக்கை விடுத்துள்ளது.

எம்.எல்.ஏ சரவணம் ஏரல் மருத்துவமனையில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓய்வில் இருந்த மருத்துவரிடம், 24 மணி நேர பணியில் மருத்துவர் இல்லாமல் இருந்தால் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏ செயலுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு

அதுமட்டுமின்றி எம்.எல்.ஏ சரவணன் ஆய்வு மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் எம்.எல்.ஏ சரவணனின் இந்த நடத்தைக்கு அரசு மருத்துவர்கள் அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கம் விளக்கம்

24 மணி நேர பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை எந்த அரசாணையும் வெளியிடவில்லை என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏரல் மருத்துவமனையில் நோயாளி எவரும் இல்லாததால், மருத்துவர் தனது பணி அறையைப் பூட்டிவிட்டு ஓய்வில் இருந்தார் என்றும், செவிலியர் அழைத்தவுடன் அவர் பணிக்கு வந்துள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 மணி நேர பணி முறையை ரத்து செய்து, உடனடியாக ஷிப்ட் முறையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம்

24 மணி நேர பணியில் இருந்த மருத்துவரைப் பொதுவெளியில் குற்றம்சாட்டும் வகையில் மக்கள் பிரதிநிதியே தவறாக சித்தரித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவசரநிலைகளில் உடனடியாகப் பணிக்கு வரத் தயாராக இருக்கும் சூழலில், ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் ஓய்வெடுப்பது அலட்சியம் அல்ல என்றும், மருத்துவர்களுக்கு ஷிப்ட் பணியை நடைமுறைப்படுத்த தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாணை 113 மற்றும் பணியிடக் குறைப்புப் புகார்

மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் (DMS) கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை உருவாக்காமல் மருத்துவர்களை மாற்று நிரவல் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை 113-ல் குறைபாடுகள் உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் 70 சதவீத அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு வலியுறுத்தல்

நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சிறப்பு சேவைகளின் அடிப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இதில் தலையிட்டு அரசாணை 113-ன் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் எதிரொலி: தாராபுரம், மதுராந்தகத்தில் 340 பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in