

TN Bypolls School Holiday Announcement Dharapuram Maduranthakam
இடைத்தேர்தல் பின்னணியும் பள்ளிகள் விடுமுறையும்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06-9-2026) நடைபெறவுள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் ஐந்துமுனைப் போட்டி
தாராபுரம், மதுராந்தகம் என இவ்விரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இவ்விரு தொகுதிகளுக்கும் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறைக்கான காரணம்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 165 பள்ளிகள், இடைத்தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களாக செயல்படவுள்ளன. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
48 பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை
இதனால் தாராபுரத்தில் 266 பள்ளிகளும், திருப்பூரில் 61 பள்ளிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 21 பள்ளிகளிலும் வேலை நாட்களாக இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 348 பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் மற்றும் பள்ளி திறப்பு விவரம்
இதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும், தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவ்விரு தொகுதிகளிலும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் மட்டும் அக். 7 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மகளிர் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை!
==============