மதுராந்தகம் தபால் வாக்குகள், திமுகவுக்கு அதிக ஆதரவு : தவெக மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியா? : முழு விபரம்..!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் திமுகவுக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
government employees extended their support to  DMK in postal votes, Maduranthakam by-election
government employees extended their support to DMK in postal votes, Maduranthakam by-electionsource:thamizhalai,ai generated
1 min read

மதுராந்தகம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

பரந்தாமனுக்கு அதிக வாக்குகள்

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நிலையில், முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுக்களில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

வாக்குப்பதிவு 86.26 சதவீதம் ஆகும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தபால் வாக்குகள் திமுக 356

தபால் வாக்குகளில் திமுகவுக்கு 358, அதிமுகவுக்கு 322, தவெகவுக்கு 136 வாக்குகள் கிடைத்துள்ளன. அரசு ஊழியர்கள் அதிகம் ஓட்டு போடும் தபால் ஓட்டுகளிலேயே எதிர்க்கட்சியான திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

தவெகவிற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பா?

இதன் மூலம் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது தெரிகிறது. தபால் வாக்குகள் பெறும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுவினர் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் உள்பட 931 வாக்காளர்கள் தபால் வாக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 893 தபால் வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in