அரசின் நலத்திட்ட உதவிகள் : தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டும்
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் முழுமையாகச் சென்று சேர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது , ஊரக வள்ர்ச்சி துறை சம்மந்தப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களும் இதில் ஆலோசிக்கப்பட்டது
திட்டங்கள் பயனாளிகளுக்கு சரிவர போய் சேருவதில்லை
இந்த ஆலோசனை கூட்டத்தில் , முதல்வரிடம் ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேருவதில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தகுதி உள்ள பயனாளிகள் அனைவருக்கும் திட்டம் போய் சேர வேண்டும்
இந்நிலையில் இன்று தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் போய் சேர வேண்டும் அது சரி வர கிடைக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது
ஊரகவளர்ச்சி துறையில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரவேண்டும்; ஒரு சில பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன
பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்; திட்டங்கள் சென்று சேர்வது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார் .
=====================