"அமித் ஷாவிடம் ஆளுநர் அறிக்கை” : தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, முக்கிய ஆலோசனை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்த தமிழக ஆளுநர் அர்லேகர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
Governor Arlekar met Union Home Minister Amit Shah submitted a report regarding law and order situation in TN
Governor Arlekar met Union Home Minister Amit Shah submitted a report regarding law and order situation in TNsource:thamizhalai,ai generated
1 min read

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். கேரள ஆளுநராக இருந்த அவர் தான், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதுமட்டுமின்றி, சட்டசபையில் முதல் உரை ஆற்றிய அவர், எந்த சலசலப்பும் இன்றி அறிக்கை வாசித்து, வியப்பை ஏற்படுத்தினார்.

முழுநேர ஆளுநராக அர்லேகர்

இந்தநிலையில், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் அக்ஸ்டு 12ம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

டெல்லியில் அர்லேகர்

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு ஆளுநராக முதல் முறையாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மட்டும் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு முன்னதாக சிறைக்கைதிகள் தப்பிச்சென்றது போன்ற பிரச்சினைகளால் பெரும் பரபரப்பான சூழலில் நிலவி வருகிறது.

அறிக்கை கேட்ட உள்துறை

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கை கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்து ஆளுநர் ஆர்லேகர் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

இருவரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் பரபரப்பு

உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதோடு, அறிக்கை அளித்து இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

==============================