
TN Governor RN Ravi Funds to Velu Aasan : பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு தன் விருப்பநிதியில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிதி உதவி வழங்கினார்.
பத்மஸ்ரீ விருதுக்கு வேலு ஆசான் தேர்வு பெற்றபோது அவரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து ஆர்.என்.ரவி கௌரவித்தார். அப்போது தனக்கு வீடு கட்டவும் பறை இசை பண்பாட்டுக் கூடம் அமைக்கவும் நிதி உதவி வேண்டும் என வேலு ஆசான்(Velu Aasan) ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் படிக்க : திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி : விஜய் அதிரடி
தற்போது பத்மஸ்ரீ விருது பெற்ற நிலையில் வேலு ஆசான், சென்னை ஆளுநர் மாளிகையில்(Chennai Raj Bhavan) ஆளுநர் ரவியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் பழமையான மற்றும் மிகவும் துடிப்பான நாட்டுப்புற மரபுகளில் ஒன்றான பறை இசை(Parai Isai) பாரம்பரிய கலையில் இளம் திறமைகளை வளர்ப்பதற்காக அவருக்கு குடியிருப்பு மற்றும் பயிற்சி மையத்தை கட்டுவதற்கு முதல்கட்டமாக ரூ. 30 லட்சம் நிதி அவருக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலு ஆசான்(Velu Aasan Speech), மொத்தம் ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இளைஞர் மத்தியில் பறை இசை கொண்டு செல்ல இந்த பண்பாட்டு பயிற்சி மையம் உதவும் என்றார்.
மேலும் படிக்க : சனாதன மரபின் துறவி திருவள்ளுவர்: அனுஷத்தில் ஆளுநர் வழிபாடு