

கொடி ஏற்றிய ஆளுநர்
77th republic day celebration - governor ravi hoisted the flag சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகே, தமிழக அரசு சார்பில், இன்று 2026 ஆம் ஆண்டு 77 வது குடியரசு தின விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அரசு அரிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், காலை 8:00 மணி அளவில் ஆளுநர் ரவி தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று தேசிய கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர். முன்னதாக ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அரசு துறையின் அலங்கார அணிவகுப்பு
முப்படைகள், தமிழக போலீசார், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அணிவகுப்பு மற்றும் அரசு துறை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தமிழக கலைஞர்கள் மற்றும் வெளி மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பதக்கங்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள்,உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர், அரசு அதிகாரிகள் புடைசூழ நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடிவுபெற்று அனைவரும் கலைந்து சென்றனர்.