Guidance TN ஊழியர்கள் ராஜினாமா விவகாரம் : தமிழக அரசு விளக்கம், தனிப்பட்ட காரணங்களால் வேலையை விட்டு விலகியதாக தகவல் ...

Guidance TN அமைப்பில் இருந்து 15 ஊழியர்கள் வெளியேறியது சர்ச்சையான நிலையில்,அவர்கள் சொந்த காரணங்களுக்காகவும், வேறு வேலைவாய்ப்புகளுக்காகவும் ராஜினாமா செய்துள்ளதாக TN GOV- விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது...
Guidance TN Resignation Row: Tamil Nadu Government Issues Clarification After Two Days
Guidance TN Resignation Row: Tamil Nadu Government Issues Clarification After Two DaysGoogle
1 min read

தமிழக அரசு தரப்பு இன்று விளக்கம் :

தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance TN-ல் இருந்து 15 ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படவில்லை என்றும், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் வேறு வேலைவாய்ப்புகளுக்காக அவர்களாகவே பணியிலிருந்து விலகியுள்ளதாகவும் அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

15 ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா :

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, Guidance TN அமைப்பில் பணியாற்றி வந்த சுமார் 15 ஊழியர்கள் பணியிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.

இதில் சிலர் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் Economic Development Board அமைப்பிலும் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால தமிழகத்தின் தொழில் முதலீடு தொடர்பான ரகசிய தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்களா?

ஊழியர்கள் தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாக கூறப்பட்டாலும், சிலர் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், பணிச்சூழல் சரியில்லாதது, நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்கள் வெளியேறியதாக முன்னாள் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் விளக்கம் :

இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தில், ஊழியர்கள் வெளியேறுவது வழக்கமான பணியாளர் மாற்றத்தின் ஒரு பகுதிதான் என்றும், பணியாளர்கள் வெளியேறியதில் அச்சுறுத்தல் அல்லது கட்டாயப்படுத்தல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Guidance TN அமைப்பில் பணியாளர் வெளியேற்ற விகிதம் சுமார் 17 சதவீதமாக இருப்பதாகவும் அரசு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகள் :

இந்த விவகாரம் தொடர்பா பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் தமிழக அரசுக்கு கேள்விகள எழுப்பியிருந்தார்.

தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்திருந்த ஊழியர்கள் அடுத்தடுத்து வெளியேறுவது ஏன் என்றும், அவர்கள் ஆந்திராவில் பணியில் சேர்ந்திருப்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு இன்று விளக்கம் கொடுத்திருக்கிறது .

=====================