DMK vs ADMK : 7.5% இட ஒதுக்கீடு யார் காரணம்! : பேரவையில் அனல்பறந்த விவாதம், EPS பதிலடி

DMK vs ADMK Debate in Tamil Nadu Assembly Session 2026 : 7.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
heated debate took place in Assembly between DMK - AIADMK members regarding  7.5% reservation.
heated debate took place in Assembly between DMK - AIADMK members regarding 7.5% reservation.google
1 min read

7.5% இட ஒதுக்கீடு - வாக்குவாதம்

A heated debate took place in the Assembly between DMK and AIADMK members regarding the 7.5% reservation : சட்டசபையில் தமிழக இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கமான அலுவல்களுக்காக சபை இன்று கூடியது.

மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள்தான் காரணம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தில் பேசிக் கொண்டிருந்த அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமிக்கு பதிலளித்து பேசிய, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம் திமுகதான் என பேசினார்.

திமுக போராட்டமே காரணம் - அமைச்சர்

அதிமுக ஆட்சிக்காலத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராக திமுக நடத்திய போராட்டமே அதற்கு அடிப்படை காரணம் எனவும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

அதிமுகவினர் அமளி, அமைச்சர் மீது குற்றச்சாட்டு

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் இருக்கையை விட்டு எழுந்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்வதாகவும் 7.5 சதவீதம் தொடர்பாக திமுகவினர் பேசிய எதாவது ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

7.5% அமல்படுத்தியது அதிமுக தான்

ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், அரசியலமைப்பு விதியை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது அதிமுக தான் எனவும் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in