தமிழகத்தில் இரு நாட்களுக்கு வெப்ப அலை : தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: புதிய காற்றழுத்த தாழ்வு, வானிலை மையம்..!

தமிழ்நாட்டில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Heatwave in Tamil Nadu for two days, meteorological department
Heatwave in Tamil Nadu for two days, meteorological department Ai generated
1 min read

தமிழகத்தில் இரு நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் இன்று முதல் வருகிற இரு நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது

வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

அதன்படி ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,

கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை , தென்மேற்கு பருவமழை தீவிரம்

வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைக்கு அருகில், வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதி செய்துள்ளது.

தற்போது உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை பெய்ய கூடும் என்றும், மேற்கண்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் ஜூலை 18 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரத்திற்கான காரணம்

கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வந்த தென்மேற்கு பருவமழை, சமீப நாட்களாக சற்று தளர்வடைந்து பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்தது.

தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி , பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தவும், மழைப் பொழிவை அதிகரிக்கவும் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்

தீவிரமடையும் மழை, காரி பயிருக்கு சாதகமான சூழல்

மேலும் தற்போது புதிதாக உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் கோடைக்கால (காரிஃப்) பயிர் சாகுபடிக்கு மிகவும் சாதகமான மழைபொழிவை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in