நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை : வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வளிமண்டலத் தாழ்வுப்பாதை: நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
Heavy rain expected tomorrow in 7 districts, including the Nilgiris: Meteorological Department!
Heavy rain expected tomorrow in 7 districts, including the Nilgiris: Meteorological Department!source:google
1 min read

Heavy rain expected tomorrow in 7 districts, including the Nilgiris: Meteorological Department!

வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து கேரளா கடலோரப் பகுதிகள் வரை, சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப்பாதை ஒன்று நிலவுகிறது.

இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கான மழைப்பொழிவு முன்னறிவிப்பு

ஜூன் 16 (இன்று)

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூன் 17 (நாளை)

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்ய வாய்ப்பு

மேலும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 18

நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மற்றும் வெயில் நிலவரம்

ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in