தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு, வெயில் தாக்கம் குறையும்! : சென்னை வானிலை மையம் கணிப்பு!

நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யகூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
Heavy rain likely in Tamil Nadu today, Chennai Meteorological Department reports
Heavy rain likely in Tamil Nadu today, Chennai Meteorological Department reports google
1 min read

வானிலை மையம் அறிவிப்பு

சுமார் 1.5 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பாதை

சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இது தமிழகத்தில் மழை எற்படுதும் சூழலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது

இன்று கனமழைக்கு வாய்ப்பு

இதனால் ,மே 07 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

இன்று கனமழை பெறும் மாவட்டங்கள்

இந்த நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்துள்ளது

மே 8 ல் கனமழை

இந்த நிலையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது நடவடிக்கையின்படி ,மே 08ல் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,

புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துளது.

வெப்பநிலை படிப்படியாக குறையும்

மே 07 முதல் 11 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை

சென்னையை பொறுத்த வரையில் , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று , லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in