வானிலை அப்டேட் : 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை மையம் அறிவிப்பு : மகிழ்ச்சியில் மக்கள்..!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் , 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
Heavy rain warning for 7 districts; Meteorological Centre announcement.
Heavy rain warning for 7 districts; Meteorological Centre announcement.google
1 min read

வானிலை மையம் அப்டேட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

வானிலை மையம் அறிவிப்பின் ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து , மிதமான சூழல் நிலவு என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அதன்படி சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை ஆகிய13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

துதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்குதொடர்ச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

அதேபோல், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு , வானிலை மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 8ம் தேதி மிதமான மழையும், வரும் 9 முதல் 12ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in