401 பேருக்கு நியமன ஆணை : கர்ப்பிணிக்கு ஆணை வழங்கி முதல்வர் நெகிழ்ச்சி: மின்வாரியத்தில் 15,000 இடங்கள் நிரப்ப ஒப்புதல்..!

நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையை, மேடையை விட்டு இறங்கிச் சென்று முதல்வர் விஜய் வழங்கி நெகிழ்ந்தார்.
CM Vijay stepped down from the stage to personally hand over a government job appointment order to pregnant woman
CM Vijay stepped down from the stage to personally hand over a government job appointment order to pregnant womangoogle
1 min read

அரசுப் பணிக்கான ஆணை

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 401 பேருக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா சென்னையில் வழங்கப்பட்டது.

383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.

முதல்வர் தலைமையில் விழா

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் விழாவானது கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.

மின்வாரியத்தில் 15,000 இடங்கள்

இதே விழாவில், நடப்பு ஆண்டிற்குள் மின்வாரியத்தில் காலியாக உள்ள 15,000 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற அதிரடி அறிவிப்பும் வெளியானது.

கர்ப்பிணி பெண்ணுக்கு நியமன ஆணை

இந்த விழாவில் நெகிழ்ச்சியான தருணமும் இயல்பாக அமைந்தது உதவிப் பொறியாளராக தேர்வாகியிருந்த அட்சயலட்சுமி ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆவார். இன்னும் சரியாக 3 நாட்களில் ( 28 ஆம் தேதி) அவருக்குப் பிரசவம் நடக்கவிருக்கும் சூழலிலும், தனது வாழ்வின் முக்கிய அங்கீகாரத்தைப் பெற அவர் விழாவிற்கு வந்திருந்தார்.

விழாவில் நெகிழ்ச்சியான தருணம்

அட்சயலட்சுமியின் நிலையைக் கண்ட முதலமைச்சர் விஜய், அவரை மேடைக்கு ஏறி வர சிரமப்படுத்த விரும்பவில்லை. சற்றும் யோசிக்காமல், உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கி, அவரிடம் வந்து பணி நியமன ஆணையை வழங்கி நெகிழ்ந்தார்

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in