பெரும்பான்மை வென்ற தவெக
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது . இந்த நிலையில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பின்னடைவை சந்தித்தன
அதிமுகவில் பிளவு
இந்த நிலையில் அதிமுகவில் இருக்கு அமைச்சர்கள் இரு பிரிவுகளாக பிரிந்திருந்தது அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியிருந்தது . சிவி சண்முகம் ஒரு தரப்பாகவும், எடப்பாடி ஒரு தரப்பாகவும் பிரிந்து இருந்தனர்
தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல் ஏ கள்
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் , ஒரு சில நிமி்டங்களிலையே தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோன்று, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார்.
தவெகவில் குதிரை பேரம் , வழுக்கும் எதிர்ப்பு
ஏற்கனவெ அதிமுகவில் இருக்கும் எம்எல்ஏக்கள் தவெக விற்கு ஆதரவாக வாக்களித்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆளுநரை சந்த்து புகார் மனுவை அளித்திருந்தனர் . இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி கண்ட அதிமுக அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாம செய்து விட்டு அதிமுகவில் இணைந்தனர் . இது அப்பட்டமான குதிரை பேரம் என்று திமுக உட்டபட அர்சியல் தலைவர்கல் எதிர்ப்பை சாடினர்
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது
விலை கொடுத்து மக்கள் பிரதிநிதிகளை வாங்கியிருப்பதாகக் கருதினால், குறிப்பிட்ட கட்சியின் பதவிப் பிரமாணத்தை ஆளுநர் தள்ளி வைக்கலாம்.
எம்எல்ஏக்கள் சிலர் புகார் அளிக்கும்ப ட்சத்தில் அதிகபட்சமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு ஆளுநரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்த அதிமுகவினர்
குதிரை பேரம் நடப்பதாக அதிமுகவினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து புகார் அளித்துள்ளனர் இந்த நிலையில் தவெக நடத்தும் குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் அளித்த மனுவை ஆளுநரிடம் அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்
இது குறித்து எம்பி தன்பால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது
த வெ க விற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுக வை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.
மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.