குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

குதிரைபேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரார் அசோக்குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
Horse-trading case: High Court grants conditional anticipatory bail to Senthil Balaji.
Horse-trading case: High Court grants conditional anticipatory bail to Senthil Balaji.google
1 min read

குதிரைபேர வழக்கு , முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

தவெக எம்.எல் .ஏவிடம் குதிரை பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் விசாரணையில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கையெழுத்திட நிபந்தனை

தவெக எம்.எல் .ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீதான முன் ஜாமீன் மனுவானது விசாரணைக்கு வந்தது.

இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியதோடு திருவல்லிகேணி காவல் நிலையத்தில் காலை மாலை என இருவேளை கையெழுத்திட வேண்டும் உத்தரவிட்டுள்ளனர்

புகார் பிண்ணனி

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

காவல் நிலையத்தில் புகார் ஆஜராகாத செந்தில் பாலாஜி

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்திருந்தனர்

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்திருந்தினர்

இந்த நிலையில் விசாரணையை வந்த வழக்கு

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்தார் செந்தில் பாலாஜி , அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதாக என்ற தீர்ப்பை அறிவித்தார்

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in