தேர்வு தாள் திருத்தும் பணி தொடக்கம்
HSC +2 Answer Sheet Valuation in Tamil Nadu : தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று அதற்கான தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கியது.
முதன்மை தேர்வர்கள் சரிபார்ப்பு
மாணவர்களின் இந்த விடைத்தாள்கள் சரிபார்ப்பு தொடங்கிய நிலையில் ,விடைத்தாள்கள் முதன்மைத் தேர்வாளர்களால் விடைக்குறிப்பு சரிபார்க்கப்பட்டது.
முன்னரே தொடங்கிய திருத்தும் பணி
தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்கள் அந்தந்த மண்டல சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் . பின்னர் அங்கிருந்து விடைத்தாள்கள் பிரித்து, திருத்துதல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த தேர்தல் திருத்தும் பணிகள் முன்னர் 8 தொடங்கும் என்று தேர்வுகள் மையம் அறிவித்திருந்தது ,ஆனால் தேர்தல் காரணங்களால் முன்கூட்டியே நடத்த திட்டம் எடுக்கப்பட்டுள்ளது
தேர்தல் பணியில் : 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள்
இந்த தேர்தல் திருத்தும் பணியில் , இன்று தொடங்கி ஏப்ரல் 20--ம் தேதி வரை இதர ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி முடிப்பார்கள். குறிப்பாக சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதனுடனேயே பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
மே 8 தேர்வு வெளியீடு
இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து இறுதி முடிவுகள் மே 8 ல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது