”ஜோசப் விஜய் எனும் நான்” : மே 7-ல் விஜய் பதவியேற்பு? : நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா!

மே 7ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Will Vijay be sworn in as Chief Minister on May 7th?
Will Vijay be sworn in as Chief Minister on May 7th? source: instagram
1 min read

"I, Joseph Vijay..." — Will Vijay be sworn in as Chief Minister on May 7th? Plans underway to hold the swearing-in ceremony at the Nehru Indoor Stadium!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியமைப்பதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக முதல்வராக விஜய்

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க இருக்கிறது. அதன்படி மே 7ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க இருப்பதாக தெரிகிறது.

சட்டமன்றக்குழுத் தலைவராக விஜய் தேர்வு

முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரான விஜய், சட்டமன்றக்குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தேர்தலைத் தொடர்ந்து, முறைப்படி ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரும் பணிகளைத் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியுள்ளது.

நாளை ஆளுநருடன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நாளை (மே 6) நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

ஆளுநரைச் சந்திப்பதற்கான நேரம் கோரப்பட்டு, அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னருக்கு மின்னஞ்சல்

முன்னதாக ஆளுநருக்கு விஜய் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மே 7 - ல் பதவியேற்பு விழா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் வரும் 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தொடர்ந்து தற்போது வெளியான தகவல்படி தலைமை செயலர் பதவியேற்பு விழா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் பங்கேற்றனர்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in