"நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான குரலாக ஒலிப்பேன்": ராகுல், முதல்வர் விஜய்க்கு நன்றி: பிரவீண் சக்ரவர்த்தி!

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பேன் என உறுதி.
Praveen Chakravarthy vows to be the voice of the Tamil people in Parliament.
Praveen Chakravarthy vows to be the voice of the Tamil people in Parliament.source:google,x
1 min read

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி?

தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணியின் முதல் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் அதிகாரப்பூர்வ எம்பி (MP) வேட்பாளராகப் பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கூட்டணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நெகிழ்ச்சியான நன்றியையும் உறுதியையும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் முதல் வேட்பாளர்

தமிழகத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ , மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து 'தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி' என்ற வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மெகா கூட்டணியின் முதல் எம்.பி

இந்த மெகா கூட்டணியின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக, நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் காணும் முதல் எம்பி வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரவீண் சக்ரவர்த்தி விடுத்துள்ள பதிவில்..!

” தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்

என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கும் மனமார்ந்த நன்ற என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் தமிழ் மக்களின் குரல்

தொடர்ந்து லட்சக்கணக்கான கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கு அசைக்க முடியாத விசுவாச உறுதிமொழி ஒன்றை வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி அளித்துள்ளார்.

அதில், "வரவிருக்கும் தேர்தலில் மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக நான் என்றும் ஒலிப்பேன்" என்று லட்சக்கணக்கான கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கு திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.

கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம்

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் வேட்பாளராகப் பிரவீண் சக்ரவர்த்தி களம் இறங்கியிருப்பது, தவெக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரவீண் சக்ரவர்த்தி உறுதி

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பேன் என உறுதி பூண்டுள்ளார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in