

இலங்கை அருகே புயல் சின்னம்?
IMD Weather Forecast Tamil : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல்- தெற்கு இலங்கை அருகில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக மாறுமா என்பது நாளைமறுநாள் தான் தெரிய வரும்.
அந்தமான் அருகே புயல்?
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்(senyar cyclone tamil). இவை இரண்டும் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.
இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை விவரங்களை பார்க்கலாம்.
இன்றும், நாளையும் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி
* தூத்துக்குடி
* ராமநாதபுரம்
27-11-2015 கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
ஆரஞ்சு அலெர்ட்
28-11-2025 மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகை
28-11-2025 கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* புதுக்கோட்டை
* அரியலூர்
* மயிலாடுதுறை
* கடலூர்
29-11-2025 மிக கனமழை ( ஆரஞ்சு அலெர்ட் ) பெய்யக் கூடிய மாவட்டங்கள்
சென்னை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்.
30-11-2025 மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* வேலூர்
* சென்னை
=========================