
ராமதாஸ் - அன்புமணி மோதல் :
Ramadoss vs Anbumani Ramadoss Fight : வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி மாறிமாறி கூட்டணி அமைத்ததால் தனது வாக்கு வங்கியை கணிசமாக இழந்து வருகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், அந்தக் கட்சி இளைஞர்களை ஈர்த்து வருகிறது.
இதனிடையே, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ், அவரது மகனும், செயல் தலைவருமான அன்புமணி இடையே நிலவி வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
ராமதாஸ் தலைமையில் செயற்குழு :
அன்புமணி தலைமை வகித்த செயற்குழுவை கலைத்த ராமதாஸ், புதிதாக 21 பேர் கொண்ட செயற்குழுவை அமைத்து, அதன் கூட்டத்தை இன்று நடத்தினார். திண்டிவனம் அருகே ஓமந்துாரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அன்புமணியை கண்டித்து தீர்மானம் :
இந்தக் கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, செயல் தலைவர் அன்புமணி(Anbumani Ramadoss) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணியின் பெயரை குறிப்பிடாமல் செயல் தலைவர் என்று மட்டுமே ராமதாஸ்(Ramadoss) குறிப்பிட்டார். அன்புமணியை விமர்சித்தும், எச்சத்தும் தீர்மானத்தின் வாசகங்கள் இருந்தன.
ராமதாசுக்கு எதிராக செயல்படக் கூடாது :
கட்சியின் தலைவர் ராமதாசுக்கு எதிராக செயல்படுவது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சட்டமன்ற உறுப்பினரை பொது வெளியில் விமர்சித்து பேசுவதும் தவறு என்று தெரிவிக்கப்பட்டது.
அன்புமணி சகோதரிக்கு முக்கியத்துவம் :
செயற்குழுவில் அன்புமணியின் சகோதரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர் மேடையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அன்புமணி அவசர ஆலோசனை :
செயற்குழுவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அன்புமணி தனது ஆதரவாளர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
===