நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு : ஓராண்டில் ரூ.156 உயர்வு..!

முதல்வரின் இந்த அறிவிப்பானது விவாசயிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 Increase  incentives for paddy and sugarcane: CM Vijay announces Assembly
Increase incentives for paddy and sugarcane: CM Vijay announces Assemblygoogle
1 min read

நெல் , கரும்புக்கான ஊக்கத்தொகை முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் , விவசாயிகளுக்கான முக்கியமான அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்

விவசாயிகளுக்கான அறிவிப்பு

அதன்படு முதல்வர் விஜய் ,தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையிலும், அவர்களின் நீண்டால்கால கோரிக்கையை ஏற்றுவும் இந்த அதிரடி முடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

நெல்கொள்முதல் தொடங்கவுள்ள நிலையில் , ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 முதல் தொடங்க உளாள் நிலையில் நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வரின் நெல் மற்றும் , கரும்பு கொள்முதல் ஊக்கத்தொகையின் படிசன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகை ரூ. 289 உயர்த்தி ரூ.2,750 நிர்ணயம் செய்யப்படுவதாகவும் , கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.

மத்தியஅரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும். பொது ரக நெல் உயர்வு: குவிண்டாலுக்கு ரூ.159 உயர்ந்து ரூ.2,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பானது வெளியாகியுள்ளது

முதல்வர் தெரிவித்துள்ளதாவது

சட்டபேரவையில், இந்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் கூறும்போது ,வசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற நியாயமான விலை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றூம் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஊக்கத்தொகை மூலம் பல லட்சம் விவசாயிகள் பயன் அடைய இது வழிவகை செய்யும் என்று தெரிவித்தார்

விவசாயிகளை இந்த அரசு ஒருபோதும் விட்டுவிடாது , முதல்வர்

குறிப்பாக ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ.156க்கு மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல்முறை., தொடர்ந்து முதல்வர் கூறும்போது ,விசாயிகளை நம் அரசு எப்போதும் விட்டுவிடாது; தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம்ட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் தெரிவித்தார்

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in