

Independence Day: Central Government awards for 20 police officers from Tamil Nadu; President's Medal for 3.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருதுகள் அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான பதக்கப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில் நாடு முழுவதும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்திற்கு 92 பேரும், வீரதீரச் செயலுக்கான பதக்கத்திற்கு 301 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிப் பதக்கத்திற்கு 664 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் தகைசால் பதக்கமும், 17 அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிப் பதக்கமும் என மொத்தம் 20 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் பதக்கம் பெறும் அதிகாரிகள்
தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவரின் தகைசால் பணிப் பதக்கத்திற்குத் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜே. விஜய் ஆனந்த், கே. ராமச்சந்திரன் மற்றும் உதவி கமாண்டன்ட் எஸ். குமார் ஆகிய 3 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பணிக்கான விருது பெற்றோர்
உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 17 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படும் உயரிய விருது
இந்திய அளவில் காவல்துறையினரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் ஆண்டிற்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என இரண்டு முறை இத்தகைய உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : கரூர் கூட்ட நெரிசல்: அரசுப் பணி ரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
======