

The Supreme Court is hearing a case today regarding the cancellation of government jobs for the families of those who died in the Karur stampede.
வழக்கின் பின்னணி
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஜூலை 27-ல் அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.
உயர் நீதிமன்ற உத்தரவு
கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட அரசுப் பணி ஆணையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல, அரசுப்பணி பெற்றவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்ததற்கு எதிரான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
நீதிபதிகள் அடங்கிய அமர்வு
இவ்வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் 23-ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன. நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க : வயது ஒரு தடையில்லை: 1992-ல் கண்ட மருத்துவர் கனவை 51 வயதில் நனவாக்கிய மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார்!
=====