
கூடுதலாக பெய்துள்ள பருவமழை
IMD Report on Northeast Monsoon Starts Date in Tamil Nadu : தென்மேற்கு பருவமழை மூலம் இந்த ஆண்டு பெரும்பாலான மாநிலங்களில் நல்ல மழை கிடைத்து இருக்கிறது. தமிழகத்திலும் வழக்கத்தை விட கூடுதலாக மழை பொழிந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது.
48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை
இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாடு அதிகளவில் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 50 சென்டி மீட்டர் அளவுக்கு ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
16 மாவட்டங்களில் கனமழை
இதனிடையே, 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூரிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக் கூடும். சென்னையில் இன்று தொடங்கும் மழை அடுத்த 2 நாட்களுக்கு தீவிரமாக இருக்கும்.
மேலும் படிக்க : அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை : அடித்து ஊற்றும் என கணிப்பு
பருவமழை தீவிரம் அடையும்
48 மணி நேரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை பின்னர் படிப்படியாக தீவிரம் பெறும். தென் மாவட்டங்களில் குறைவாகவும், வட மாவட்டங்களில் மிக அதிகமாகவும் மழைப்பொழிவு இருக்கும்.
=========