”வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு” : 97 ஒப்பந்தங்கள், ரூ. 67,452 கோடிக்கு முதலீடு, 1 லட்சம் வேலைவாய்ப்புகள்..!

சென்னையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 67 ஆயிரத்து 452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
Investments worth ₹67,452 crore  attracted through the 'Vetri Tamil Nadu' (Successful Tamil Nadu) Investors' Meet
Investments worth ₹67,452 crore attracted through the 'Vetri Tamil Nadu' (Successful Tamil Nadu) Investors' Meet google
2 min read

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி இருக்கிறது. வெளிப்படையான, ஊழற்ற நிர்வாகம், மக்கள் நலனுக்கு முக்கியத்துவம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கூடுதல் முயற்சிகள் என தவெக அரசு செயல்பட்டு வருகிறது.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு

இந்தநிலையில், சென்னையில் இன்று, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. புதிய அரசு அமைந்த பிறகு அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் நிகழ்வு என்பதால் பெரும் கவனம் பெற்றது இந்த மாநாடு.

1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு

1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில், தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக பல்வேறு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் தொழில் தொடங்க உரிய வசதிகள் செய்து தருவதோடு, ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதை

முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்

முதலீட்டாளர்களை வரவேற்று பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தானா, முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகத்தின் அனைத்து துறைகளும் ஓரணியில் நிற்பதாக தெரிவித்தார். தவெக அரசின் 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இன்றோடு 96 நாட்கள் ஆகிறது. அந்த வகையில முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

15 நாடுகள் முதலீடு செய்ய ஆர்வம்

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்பட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வந்து இருக்கின்றன.

அந்தவகையில், முதலீடு செய்யும் சில முக்கிய நிறுவனங்கள், தொழில் தொடங்குவதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 4 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதால், 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அந்த நாட்டின் மற்றோரு முன்னணி நிறுவனமான BIZER, 300 கோடி ரூபாயில் தொழில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் ஆவிட் குரூப் நிறுவனம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடியில் 7 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருப்பதால் 12 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.

ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ஆயிரத்து 651 கோடியை முதலீடு செய்து தொழில் தொடங்குவதால், 4,316 பேருக்கு வேலை கிடைக்கும்.

லைட் ஹவுஸ் கிரின் நிறுவனம் ரூ.10,000 கோடி'உம், ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடியில் முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரூ.67,452 கோடி முதலீடு

இன்றைய மாநாட்டில் 67 ஆயிரத்து 452 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை பயன்பட்டிற்கு வந்தால், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

20 மாவட்டங்களில் வளர்ச்சி

அதுமட்டுமின்றி, முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் மூலமாக, சுமார் 20 மாவட்டங்களுக்கான, தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை பெறும்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார சூழலும் உயரும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

ஏற்கனவே தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, 35 ஆயிரத்து 62 கோடி ரூபாய் அளவுக்கு 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்தாகி இருக்கின்றன.

இதன் மூலம் 14,790 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று 67 ஆயிரத்து 452 கோடி மதிப்பில் 97 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தனியார் நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாநாட்டின் போது வழங்கினார் முதல்வர் விஜய்.

பல்வேறு திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

தினமும் ஆயிரம் கோடிக்கு முதலீடு

தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள் தினமும் ஆயிரம் கோடி என்ற அளவில் ஒரு லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பினை பெற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தொழில்கள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வர இருப்பதால், அந்த மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

2036ம் ஆண்டிற்குள் 1 புள்ளி 5 டிரில்லியன் டாலர் என்கிற இலக்கை நோக்கி தமிழகம் வெற்றிநடை போட்டு வருகிறது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in