ஈரான்-இஸ்ரேல் போர் : தினமும் 5 கோடி இழப்பை சந்திக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள்

Israel Iran War in Tamil : நீடித்து வரும் ஈரான் இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி நாமக்கல் முட்டை ஏற்றுமதி ரூ.5 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
Iran-Israel war - Namakkal egg exports suffer losses of Rs. 5 crore
Iran-Israel war - Namakkal egg exports suffer losses of Rs. 5 crore google
1 min read

ஈரான் இஸ்ரேல் மோதல்

Israel Iran War in Tamil : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின் படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பாதிப்பை சந்தித்து வரும் ஏற்றுமதி

ஈரான் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளை மட்டுமின்றி அனைத்து வகையான பொருட்களின் ஏற்றுமதியம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

நாமக்கல் முட்டை ஏற்றுமதியில் பாதிப்பு

அந்த வகையில் இந்தியாவின் முக்கிய முட்டை உற்பத்தி மற்றும் வர்த்தக மையங்களில் ஒன்றான நாமக்கல், வெளி நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது

தற்போது ஈரான் இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அந்நாடுகளில் ஏற்றுமதியானது சற்று சிக்கலான நிலையில் உள்ளது .

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முட்டை ஏற்றுமதி வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியதாவது:

துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளது மற்றும் வான்வெளியில் கட்டுப்பாடுகள் சரக்கு ஏற்றுமதியை பதித்துள்ளதாகவும் ,மேலும் போக்குவரத்து வழிகள் துண்டிக்கப்பட்டதால், முட்டைகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களை அனுப்ப முடியாத நிலை இருக்கிறது.

கொள்முதல் முதல் பேக்கிங் மற்றும் சரக்கு விநியோகம் முழுவதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவும் தெரிவித்துள்னர்.

அரசு தலையிட வேண்டும்

கோழிப்பண்ணைகள் பெரும் இழப்பைத் தவிர்க்க தற்போது ஒரு முட்டையை ரூ.3.50க்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .

ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.4.50 ஆக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வசதியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி . இந்தப் பிரச்னையை மத்திய அரசு கையாள வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in