

முந்தைய திமுக அமைச்சரவை
Tamil Nadu Cabinet Ministers: 2021-2026 திமுக ஆட்சியில் முதலில் கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், சி. வி. கணேசன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கோவி. செழியனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
முதல்வர் விஜயின் அமைச்சரவை
இந்தநிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது மே 10ம் தேதி முதலமைச்சராக விஜயும், அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதன்படி 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
33 ஆக உயர்ந்த எண்ணிக்கை
இன்றைய தினம் 21 தவெக அமைச்சர்கள், 2 காங்கிரஸ் அமைச்சர்கள் என 23 பேர் பதவியேற்றனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் விஜயுடன் சேர்த்து 33 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலின அமைச்சர்கள் 7 பேர்
இதனிடையே தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்டியலின பிரிவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகனும், அவிநாசி தொகுதியில் கமலியும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மதன் ராஜாவும் அமைச்சராகி இருக்கிறார்கள்.
6 பேர் தவெக, ஒருவர் காங்கிரஸ்
அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜ், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., தென்னரசு மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஸ்வநாதன் ஆகிய 7 பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தமிழக வெற்றிக் கழகம், ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கொண்டாடும் தவெகவினர்
அமைச்சரவையில் பட்டியினத்தை சேர்ந்த 7 பேர் இடம்பிடித்து இருப்பது தமிழக வரலாற்றில் திருப்பமாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் அரசின் இந்தப் புரட்சி செய்துள்ளதாக தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றால் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
திராவிட கட்சிகளின் ஆட்சியில்....
தமிழகத்தில் 46 தனித்தொகுதிகள் உள்ளன. பட்டியலின சமூகத்தினருக்கு 44 தொகுதிகளும், பழங்குடியின பிரிவினருக்கு 2 தொகுதிகளும் உள்ளன.
திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் குறைந்தப்பட்சம் 2 அல்லது 3 பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படும்.
===