ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு :காதலியின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி ஐடி ஊழியர் கவின் குமார் கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
IT employee Kavin's murder case: SI Krishnakumari, the girlfriend's mother, arrested
IT employee Kavin's murder case: SI Krishnakumari, the girlfriend's mother, arrested google
1 min read

கவின் குமார் கணேஷ் கொலை வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி ஐடி ஊழியர் கவின் குமார் கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

மாற்று சமூகப் பெண்ணை காதலித்து வந்ததால் அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.

சுர்ஜித்தின் பெற்றோர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உதவி ஆய்வாளர்காளக பணியாற்றி வருகின்றனர். கவின் குமார் கணேஷ் கொலை வழக்கு(Kavin Murder Case) பதிவு செய்யப்பட்டதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரணை :

இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில், தேசிய ஆதிதிராவிட ஆணையத் தலைவர் திரு. கிஷோர் மக்வானா தலைமையிலான உறுப்பினர்கள் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் குமார் கணேஷ்-ன் பெற்றோரிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்

தொடர்ந்து வரும் வழக்கு : கைது செய்யப்பட்ட காதலியின் தாயர்

நெல்லையில் காதல் விவகாரத்தில் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் காதலியின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கொலையாளி சுர்ஜித், அவரது தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் ஏற்கெனவே கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in